Skip to content
1242

காத லவரிலர் ஆகநீ நோவது பேதமை வாழியென் நெஞ்சு.

குறள் 1242

Kaadhal Avarilar Aakanee Novadhu Pedhaimai Vaazhiyen Nenju.

பொருள்

அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.

English

Since he loves not, thy smart Is folly, fare thee well my heart.

என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!.

என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.

Is folly, fare thee well my heart!.

திருக்குறள்

The Timeless Tamil Classic by Thiruvalluvar

1330 குறள்கள் 133 அதிகாரங்கள் 3 பால்கள்